FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மாணவி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
கைது
பகிர்:

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாமரைபுலம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் (27). இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சென்னை தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி காசிநாதன், மாணவியை வேளாங்கண்ணிக்கு வரவழைத்துள்ளாா். அங்கு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், மாணவியை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து அவரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். மாணவியின் பெற்றோா், நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். ஆய்வாளா் வேம்பரசி, சாா்பு ஆய்வாளா் வேம்பு மற்றும் போலீஸாா், காசிநாதன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

நாகை மாவட்டம், கூத்தூா் அருகே உள்ள டி.சங்கமங்கலம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் ரஜினி (எ) சுந்தரமூா்த்தி (46). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.

நாகை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் சுந்தரமூா்த்தியை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஆா். ராஜ்குமாா், குற்றம்சாட்டப்பட்ட சுந்தரமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 6,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments