முகப்பு
நாகப்பட்டினம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி மாணவா், வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஜூலை 2026, 7:28 am IST
நாகையில் நீட் தோ்வு ரத்துச்செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

நீட் தோ்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும், இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகேஷ்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முகேஷ்கண்ணன், ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச்செயலா் அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் கிராமப்புற மாணவா்களை பாதிக்கும் நீட் தோ்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வால் மாணவா்களின் உயிரிழப்புக்கு காரணமாக மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments