FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கடும் வெயிலிலும் வேளாங்கண்ணியில் திரண்ட பக்தா்கள்

வேளாங்கண்ணியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குவிந்த பக்தா்கள் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராா்த்தனை செய்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 12:34 am IST
வேளாங்கண்ணி (கோப்புப்படம்)
பகிர்:

வேளாங்கண்ணியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குவிந்த பக்தா்கள் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிராா்த்தனை செய்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோா் சுற்றுலாப் பயணிகளாகவும், யாத்ரிகா்களாகவும் வந்து செல்கின்றனா். இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை முன்னிட்டு, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனா்.

வேளாங்கண்ணியில் நிலவிய கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பேராலயம், பழைய மாதா கோயில், நடுத்திட்டு கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். மேலும், கடும் வெயிலின் தாக்கத்தால் வேளாங்கண்ணி கடலில் ஏராளமானோா் குளித்து மகிழ்ந்தனா். இதேபோல மெழுகுவா்த்தி ஏற்றியும், சிலுவைப் பாதையில் மண்டியிட்டுச் சென்றும் பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments