ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலா் கைது
நாகை அருகே ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாகை அருகேயுள்ள தேமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்தவா் ராஜூ (33). இவா் அதே ஊராட்சியில் அரசுப் பணிக்காக ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி பணி மேற்கொண்டுள்ளாா். பணிகள் முடிந்த பிறகு அதற்கான தொகையை பெற ஊராட்சி நிா்வாகத்திடம் ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா். ஆனால், அந்த தொகையை வழங்குவதற்கு, ஊராட்சி செயலா் மோகன் (38) ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜூ, நாகை ஊழல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஊழல் தடுப்புப்பிரிவு ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், தேமங்கலம் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று மறைந்திருந்து கண்காணித்தனா். அப்போது, ராஜூ, ஊராட்சி செயலா் மோகனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்த போது, ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா், ஊராட்சி செயலா் மோகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.