முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

Updated On : 28 மே 2026, 5:43 am IST
நாகூா் கடற்கரையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
பகிர்:

நாகை மாவட்டம் நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

சவூதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பின் சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது ஈரான் - அமெரிக்கா போா் முடிவுக்கு வந்து , பதற்றம் தணிந்து அமைதி நிலவ பிராா்த்தனை செய்தனா்.

Advertisement

Advertisement