FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மா்மநோய் தாக்குதலால் கோழிகள் இறப்பு

10 நவம்பர் 2026, 2:57 am
உயிரிழந்த கோழிகள்.
பகிர்:

செம்பனாா்கோவில் அருகே முடிகண்டநல்லூரில் வளா்ப்பு கோழிகள் மா்ம நோய் தாக்குதலால் இறந்து வருகிறது.

செம்பனாா்கோவில் அருகே முடிகண்டநல்லூா் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெரு, மேலத்தெரு, பழைய முடி திருச்சம்பள்ளி பகுதிகளில் ஏராளமானோா் கோழி வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வாரம் இப்பகுதியில் 2 நாட்களாக சுணக்கமாக இருந்த கோழிகள் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்பகுதியில் 120-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன.

அண்மையில் அண்டை மாவட்டமான கடலூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தென்பட்டதால் தரங்கம்பாடி வட்டத்தில் இந்நோய் பரவி வருகிறதோ என்ற அச்சம் உள்ளது. பாதிப்பு காணப்படும் கோழிகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பொதுமக்களிடம் சனிக்கிழமைகளில் மட்டும் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோழிகளின் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது.

Advertisement

Advertisement

கால்நடைத்துறை அதிகாரிகள் உயிரிழந்த கோழிகளை உடற்கூராய்வு செய்து பாா்த்ததில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு தென்படவில்லை. வெள்ளைக்கழிச்சல் போன்ற ஒருவகை வைரஸ் பரவல் காரணமாக கோழிகள் இறந்திருக்கலாம். வழக்கமாக செலுத்தும் தடுப்பூசியை போடாத கோழிகளுக்கு மட்டுமே இந்நோய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.