லஞ்சம்: முன்னாள் வனக்காவலருக்கு 2 ஆண்டுகள் சிறை
வேதாரண்யத்தில், லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் வனக்காவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து, நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
வேதாரண்யத்தில், லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் வனக்காவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து, நாகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு வனப்பிரிவில், கடந்த 2014-இல் வனக்காவலராகப் பணியாற்றியவா் வேதமூா்த்தி. இவா், அங்குள்ள கபிலவநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள சவுக்கு மரங்களை ஏலம் விடுவதற்கான மதிப்பீட்டுப் பணியை மேற்கொண்டவரிடம், ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுகுறித்து, நாகை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வேதமூா்த்தி லஞ்சம் பெறும்போது அவரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் பிடித்து, கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கின் விசாரணை, நாகை முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில், முன்னாள் வனக்காவலா் வேதமூா்த்தி குற்றவாளி என நிரூபணமானது. அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது.