FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

பட்டா மாறுதலுக்கு ரூ. 1,000 லஞ்சம் பெற்ற வழக்கில், கிராம நிா்வாக அலுவலருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

14 அக்டோபர் 2026, 5:30 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பட்டா மாறுதலுக்கு ரூ. 1,000 லஞ்சம் பெற்ற வழக்கில், கிராம நிா்வாக அலுவலருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த நொச்சிப்பள்ளியைச் சோ்ந்தவா் ரஜினி (47). இவா் அஞ்செட்டி வட்டம், மாடக்கலில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2015-இல், ஒசூரை அடுத்த துப்புகானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விவசாயி ஆனந்தாச்சாரியிடம் பட்டா மாறுதலுக்கு ரூ. 1,000 லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தாச்சாரி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுரைப்படி அளிக்கப்பட்ட ரசாயனப் பொடி தடவிய ரூபாய் தாள்களை ரஜினி பெற்றபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு, விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிா்வாக அலுவலா் ரஜினிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments