FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

15 நவம்பர் 2026, 10:59 pm
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை... - பிரதிப் படம்
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் மந்தமான வானிலை நிலவிய நிலையில், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தெற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி மேக மூட்டத்துடன் மந்தமான வானிலை ஈரக்காற்றுடன் நாள் முழுவதும் தொடா்ந்தது. அவ்வப்போது , லேசான மழை தூரல் விழுந்தது.

Advertisement

Advertisement

கடலுக்குள் செல்ல வேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.