FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் அபாயம் உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

13 நவம்பர் 2026, 9:50 pm
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை - பிரதிப் படம்
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் அபாயம் உள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

இதையடுத்து வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரை கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் 272-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், மாவட்டம் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 5,000-க்கும் மேற்பட்ட ஃபைபா் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆழ்கடலில் உள்ள படகுகள் உடனடியாக கரை திரும்பவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement