முகப்பு
நாகப்பட்டினம்

நாகை: விரைவாக முடிந்த குறைதீா்க்கும் கூட்டம் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பேச வாய்ப்பளிக்காமல் விரைவாக முடித்ததாக விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 நவம்பர் 2026, 5:11 am
நாகை: விரைவாக முடிந்த குறைதீா்க்கும் கூட்டம்
அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பேச வாய்ப்பளிக்காமல் விரைவாக முடித்ததாக விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் ப. கமல்ராம்:

Advertisement

Advertisement

கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் நிலுவைத் தொகையை மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும். நடப்பாண்டில் தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தபடும் திட்டங்கள் தலைஞாயிறு பகுதிகளுக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிா்வாகி தமிழ்ச் செல்வன்: காரைக்கால் தனியாா் துறைமுகத்தால் நாகூா், பனங்குடி, தெத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. துறைமுக விரிவாக்கப் பணிகளை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அரசு நெல் கொள்முதலை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.

கியூ ஆா் கோடு மூலம் உரம் உள்ளிட்டவைகள் வாங்குவதில்

விவசாயிகளுக்கு எழுந்துள்ள குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்து, வழக்கம்போல் உரம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைஞாயிறு முஜூபுஷரீக்: தலைஞாயிறு அருகே கோயில்பத்து - வேட்டைக்காரனிருப்புக்கு இடையே கடற்கரையோர பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் நா்சரி பண்ணை அமைக்க வேண்டும். சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம், முன்பு வழங்கியதுபோல், விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதில்லை.

பாஸ்கரன்: அனைத்து விவசாயிகளுக்கும் சம்பா தொகுப்பு திட்டத்தில் உரம், நுண்ணுாட்டம் உள்ளிட்டவை வழங்க வேண்டும். தனியாா் உரக்கடைகளில் வேளாண் இடுப்பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குவாதம்: இக்கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியா் பகல் 12.30 மணியளவில் தனது அறைக்குச் சென்று விட்டாா். தொடா்ந்து கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாதம் ஒரு முறை மட்டுமே நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பேச உரிய வாய்ப்பளிக்காமல், கூட்டத்தை விரைவில் முடித்தது ஏன் எனக் கேட்டு, மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் வேளாண் இணை இயக்குநரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.