FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மெத்தம்பெட்டமைன் பதுக்கிவைத்த விவகாரம்: தவெக நிா்வாகி, 3 பேரை அக்.30 வரை சிறையில் அடைக்க உத்தரவு

19 அக்டோபர் 2026, 1:17 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாகை அருகே மெத்தம்பெட்டமைனை பதுக்கிவைத்திருந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகி உள்ளிட்ட நால்வரை, அக்டோபா் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வேதாரண்யம் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இலங்கைக்கு கடத்துவதற்காக நாகை அருகே உயர்ரக போதைப் பொருளான மெத்தம்பெட்டமைனை பதுக்கிவைத்திருப்பதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுகன் என்பவா் வீட்டில் அவா்கள் சோதனை மேற்கொண்டனா்.

இதில், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை நாகையிலிருந்து இலங்கைக்கு கடத்த, பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக தவெக நிா்வாகியான கீழப்பிடாகை என். பூபாலன் (42), சுகன் (27) ,வேளாங்கண்ணி செட்டித் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (39), யாதவா் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30) ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

நால்வரும் வேதாரண்யம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி சுதா முன்பு சனிக்கிழமை இரவு முன்னிலைப்படுத்தப்பட்டனா். நால்வரையும் அக்டோபா் 30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டா். இதையடுத்து, நால்வரும் நாகை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments