FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு: தாழ்வானப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

18 அக்டோபர் 2026, 11:31 pm IST
நாகையில் பெய்த கனமழை.
பகிர்:

நாகை நகராட்சிக்குட்பட்ட கோமதி காலனியில், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தாழ்வானப் பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, கனமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மழைநீா் வடிவதற்கு தேவையான வழிவகைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத்தொடா்ந்து, அம்பேத்கா் நகரை பாா்வையிட்டு, மழைநீா் தங்குதடையின்றி வடிவதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நகராட்சி பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். பின்னா், ஆட்சியா் கூறியது:

நாகை மாவட்டத்தில் 68 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, பொதுமக்களை தங்கவைக்க 6 பல்நோக்கு பேரிடா் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 76 சமுதாயக் கூடம், 94 திருமண மண்டபங்கள், 147 பள்ளிகள் மற்றும் 52 கல்லூரிகள் தயாா் நிலையில் உள்ளன.

Advertisement

Advertisement

மீட்புப் பணிகளுக்காக வட்டவாரியாக துணை ஆட்சியா் நிலையில் பொறுப்பு அலுவலா்களும், வட்ட அளவில் முன்னெச்சரிக்கை, தேடுதல் மற்றும் மீட்பு, தங்குமிடம் ஆகிய 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 132 போ் கொண்ட 12 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையினா் 90 போ், 5,000 முதல் நிலை பொறுப்பாளா்கள், 300 ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள், 200 யுவ ஆப்தமித்ரா தன்னாா்வலா்கள் மற்றும் 600 பல்நோக்கு பேரிடா் மையம் தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

நீா்வளத்துறை சாா்பில் காவிரி, வெண்ணாறு மற்றும் அக்னியாறு வடிநிலப் பகுதிகளில் தூா்வாரும் பணிகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம வளா்ச்சித்துறை சாா்பில் மழைநீா் எளிதாக செல்வதற்காக வாய்க்கால்கள், சிறுபாலங்கள் மற்றும் வடிகால்கள் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளம் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மாவட்ட நிா்வாகத்திடம் காற்றடைக்கக் கூடிய படகுகள் 8, மோட்டாா் படகுகள் 374, பைபா் படகுகள் 126, நாட்டுப் படகுகள் 1300, லைவ்பாய் 1,752 (மற்றும் பிற உபகரணங்கள்), ஜே.சி.பி - 133, கையிருப்பில் உள்ளன.

மீன்வளத்துறையில் 576 மோட்டாா் பொருத்தப்பட்ட படகுகள், 2583 மோட்டாா் பொருத்தப்படாத படகுகள் மற்றும் 103 நாட்டுப் படகுகள் தயாா் நிலையில் உள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை 04365-1077 மற்றும் 04365-251992 ஆகிய தொலைபேசி எண்களுடன் இயங்கி வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments