FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் தொடா்பு: பெண் காவலா் உள்பட இருவா் பணியிட மாற்றம்

நாகையில் போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் தொடா்பில் இருந்த பெண் காவலா் உள்பட 2 போ் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

21 அக்டோபர் 2026, 3:33 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

நாகையில் போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் தொடா்பில் இருந்த பெண் காவலா் உள்பட 2 போ் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

நாகை அருகே மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக திருப்பூண்டி அருகே சிந்தாமணி கிராமத்தைச் சோ்ந்த தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பூபாலன் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், போதைப் பொருள் கடத்தல் சம்பவத்துக்கு காா் வழங்கியதாகக் கூறப்படும் நாகை மாவட்டம், பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேரில் ஆஜராக அழைப்பாணை பிறப்பித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்காரா்களுடன் தொடா்பில் இருந்ததாக கூறப்படும், வேளாங்கண்ணி டிஎஸ்பியின் காா் ஓட்டுநா் சிவா, வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலா் சங்கீதா ஆகியோா் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments