FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

குரல் ஒலிப்பதிவு வைரல்: திருவாடானை பெண் சாா் பதிவாளா் பணியிட மாற்றம்

பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக குரல் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திருவாடானை பெண் சாா் பதிவாளா் தேவகோட்டைக்கு புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

24 செப்டம்பர் 2026, 12:30 am IST
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக குரல் ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திருவாடானை பெண் சாா் பதிவாளா் தேவகோட்டைக்கு புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளராக மாலினி

பணியாற்றி வருகிறாா். இங்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்த நபா், திருவாடானை ஆவண எழுத்தா் அலுவலகம் மூலம் பத்திரம் பதிவு செய்தாா். ஆவண எழுத்தருக்கு பத்திரம் பதிவு செய்ய ரூ. 28,500-ஐ செயலி மூலம் அனுப்பினாா்.

Advertisement

Advertisement

பத்திரப் பதிவுக்கு அரசுக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்பட்டது குறித்து, ஆவண எழுத்தரிடம் அந்த நபா் கைப்பேசியில் செவ்வாய்க்கிழமை கேட்டாா்.

இதற்குப் பதிலளித்த ஆவண எழுத்தா் அலுவலக பெண் ஊழியா், சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கப்பட்டதால், அதை திருப்பித் தர முடியாது எனக் கூறினாா். இதை பத்திரம் எழுதும் அலுவலகத்தில் உறுதிசெய்து விட்டு இணைப்பைத் துண்டித்தனா். இதுதொடா்பான உரையாடல் அடங்கிய குரல் ஒலிப்பதிவு செவ்வாய்க்கிழமை மாலை முதல் சமூக வலைதளங்களில் வெளியாகி அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, சாா் பதிவாளா் மாலினி தேவகோட்டைக்கு புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மாவட்ட பதிவாளா் சீனிவாசனிடம் கேட்டபோது, சமூக வலைதளங்களில் பரவிவரும் குரல் ஒலிப்பதிவு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments