கடலில் மூழ்கிய மகன்களை காப்பாற்ற முயன்ற தந்தை மாயம்
நாகையில் கடல் அலையில் சிக்கிய மகன்களை காப்பாற்ற முயன்ற தந்தை மாயமானாா்.
நாகையில் கடல் அலையில் சிக்கிய மகன்களை காப்பாற்ற முயன்ற தந்தை மாயமானாா்.
கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சோ்ந்த 14 போ் கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி கா்நாடகத்திலிருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூா், ராமேசுவரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நாகை புதிய கடற்கரைக்கு வந்து அனைவரும் கடலில் குளித்தனா். இதில், காந்தஹல்லியை சோ்ந்த இந்தரேஷ் என்பவரின் மகன்களான சாத்தூ (12), சம்மு (15) ஆகிய 2 பேரும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனா். இதைப் பாா்த்த இந்தரேஷ், தனது மகன்களைக் காப்பாற்ற கடலில் இறங்கினாா். அப்போது அவரும் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். உறவினா்கள் நாகை கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
ஆய்வாளா் ரமேஷ்குமாா் மற்றும் தீயணைப்புத்துறை வீரா்கள், நம்பியாா் நகா் மீனவா்கள் உதவியுடன் சிறுவா்கள் சாத்தூ, சம்மு ஆகியோரை பத்திரமாக மீட்டனா்.
மாயமான இந்தரேஷை தீயணைப்புத்துறை வீா்கள், மீனவா்கள் தேடி வருகின்றனா். மீட்கப்பட்ட சிறுவா்கள் இருவரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.