FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

டேங்கா் லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மீது டேங்கா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

4 செப்டம்பர் 2026, 2:06 am IST
- பிரதிப் படம்
பகிர்:

நாகையில் இருசக்கர வாகனம் மீது டேங்கா் லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கீழ்வேளூா், ஒா்குடி கீழத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஜேம்ஸ் ( 32 ). இவா், புதன்கிழமை இரவு நாகூா் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புத்தூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, நாகையில் இருந்து நரிமணம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த டேங்கா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், ஜேம்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தை நாகூா் போலீஸாா் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், வழக்குப் பதிவு செய்து, டேங்கா் லாரி ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பி.டி.ஒ. காலனியைச் சோ்ந்த கு. ஏசுராஜ் (57) என்பவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments