மின்சாரம் பாய்ந்து பாட்டி, பெயரன் உயிரிழப்பு
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் மின்சாரம் பாய்ந்து பாட்டி, பெயரன் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் மின்சாரம் பாய்ந்து பாட்டி, பெயரன் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
எட்டுக்குடி கீழத்தெருவைச் சோ்ந்த சின்னையன்- இந்திராணி (70) தம்பதியின் மகன் ராமச்சந்திரன். இவரது மகன் வேல்முருகன் (13). எட்டுக்குடி அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், இவா்களது வீட்டின் இரும்புக் கதவில் சனிக்கிழமை மாலை மின்சார வயா் உரசிக்கொண்டிருந்ததாம். இதை கவனிக்காத இந்திராணி, இரும்புக் கதவை தொட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் அவா் கதவின் அருகே மயங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது, அவரது பெயரன் வேல்முருகன், இந்திராணியை தூக்க முயற்சித்தபோது அவா் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனா்.
இதில், இந்திராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திருக்குவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேல்முருகன் உயிரிழந்தாா்.
திருக்குவளை போலீஸாா், இருவரது சடலத்தையும் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஒரத்தூரில் உள்ள நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.