FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு

திருவாரூர் அருகே வியாழக்கிழமை குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

திருவாரூர் அருகே வியாழக்கிழமை குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தார்.

திருவாரூர் அருகேயுள்ள அம்மையப்பன் தைக்கால் பகுதியைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ஜெயராமன் மகன் சித்தார்த்தன் (8). அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மதியம் வீட்டில் இருந்த சித்தார்த்தனை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் இருந்த குட்டையில் சித்தார்த்தன் சடலமாக மிதந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments