FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வாய்க்கால்கள் தூர்வாரக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

குடவாசல் அருகே வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:56 am IST
பகிர்:

குடவாசல் அருகே வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
குடவாசல் அருகேயுள்ள அரசவணங்காடு, செம்மங்குடி, தீபங்குடி, உள்ளிட்ட ஊர்களில் உள்ள வாய்க்கால்கள் தூர்வார வேண்டும், செம்மங்குடி-அரசவணங்காடு (செட்டியார்காடு) சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும், அரசவணங்காடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால், அங்குள்ள ஆரம்ப சுகாதர நிலையம் எதிரில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசவணங்காடு, செம்மங்குடி, தீபங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அரசவணங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து அங்கு சென்ற குடவாசல் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, திருவாரூர் வட்டாட்சியர் குணசீலி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, கோரிக்கை மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். 
இதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் தமிழ்நாடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன், செயலர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் கலைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments