FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூத்தாநல்லூர் அருகே மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகேயுள்ள கீழமணலி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகேயுள்ள கீழமணலி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார்.
மன்னார்குடி ஒன்றியம், கூத்தாநல்லூர் வட்டம், கீழமணலி கிராமம், காரநாதன் கோயில் தெருவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வந்தார். அப்பகுதி மக்களிடம் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததார். இதில், ஏதாவது குறைகள் நிலவும்பட்சத்தில், அவற்றை தீர்த்து வைப்பதாகக் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியையும், வியப்பையும்
ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments