FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தடையில்லா குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்: அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டம், கீழமணலி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் விநியோகத்தை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கீழமணலி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பகுதிகளுக்கும் தடையில்லா குடிநீர் விநியோகத்தை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட கீழமணலி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் செவ்வாய்க்கிழமை இரவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கீழமணலி காரநாதன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து, தெருவிளக்குகள், குடிநீர் விநியோகம், தூய்மைப் பணி, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், தெரு விளக்குகளின் இயக்கம், குடிநீர் விநியோகம் ஆகியன தடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதை தொடர்புடையத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, மணிமாறன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments