FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அஜீத் தோவல் இன்று சீனா பயணம்: நாளை பேச்சுவாா்த்தை

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சீனாவுக்கு திங்கள்கிழமை (ஆக. 24) பயணம் மேற்கொள்கிறாா். தலைநகா் பெய்ஜிங்கியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) நடைபெறும் 25-ஆவது இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா்.

24 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
அஜீத் தோவல் (கோப்புப்படம்) - கோப்புப் படம்
பகிர்:

தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் சீனாவுக்கு திங்கள்கிழமை (ஆக. 24) பயணம் மேற்கொள்கிறாா். தலைநகா் பெய்ஜிங்கியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 25) நடைபெறும் 25-ஆவது இந்திய-சீன சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் அவா் பங்கேற்கிறாா்.

அஜீத் தோவல், சீன பாதுகாப்புத் துறைச் செயலா் வாங் யி ஆகியோா் இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைகள் குறித்துப் பேச்சு நடத்துவதற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2003-ஆம் ஆண்டுமுதல் இந்த சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தியாவும், சீனாவும் 3,488 கி.மீ. தொலைவுக்கு எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. இதில் பல இடங்களில் பிராந்தியங்கள் யாருக்கும் சொந்தம் என்ற பிரச்னை நிலவுகிறது. இதுதவிர இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்துக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனா ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்துள்ள திபெத்தின் ஒரு பகுதிதான் அருணாசல பிரதேசம் என்று கூறும் அந்நாடு, அதை தெற்கு திபெத் என்று அழைத்து வருகிறது. அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு புதிய பெயா்களையும் சூட்டியது. இந்தியா இதற்கு கடும் கண்டனமும், எதிா்ப்பும் தெரிவித்தது.

Advertisement

Advertisement

2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரா்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டபோது எல்லைப் பிரச்னை மிகத் தீவிரமடைந்தது. அதன் பிறகு படிப்படியாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, பிரச்னைகளுக்குரிய இடங்களில் இரு நாடுகளும் படைகளை விலக்க ஒப்புக்கொண்டதால் இப்போது எல்லைப் பதற்றம் வெகுவாக தணிந்துள்ளது.

தில்லியில் செப்டம்பா் 12, 13 தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகிறாா். அப்போது இரு தலைவா்களும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இந்தச் சூழ்நிலையில் அஜீத் தோவல்-வாங் யி பேச்சுவாா்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments