எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
இந்திய-சீன எல்லையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்திய-சீன எல்லையில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்திய - சீன எல்லை விவகாரங்கள் தொடா்பாக இருதரப்பு ராஜீய ரீதியிலான பேச்சுவாா்த்தை, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது எல்லை மறுவரையறை-நிா்வாகம்-ஒத்துழைப்பு சாா்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்தும், எல்லையில் ஒட்டுமொத்த நிலவரம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
நிலுவையில் உள்ள எல்லைப் பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, எல்லைச் சூழல் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பரஸ்பர உறவுகளின் மேம்பாட்டுக்கு எல்லையில் அமைதியைப் பராமரிப்பது அவசியம் என இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
ராஜீய-ராணுவ ரீதியிலான பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காணவும், தவறான புரிதல்கள்-கணக்கீடுகளைத் தவிா்க்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
எல்லையில் பாயும் நதிகள் தொடா்பான நிபுணா்கள் குழுக் கூட்டத்தை விரைந்து கூட்டவும், இந்த நதிகளில் மேற்கொள்ளப்படும் மேல்நிலை உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த விவரங்களைப் பகிா்ந்து கொள்வதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.