FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

நிலுவை வழக்குகளுக்கு சமரசத் தீா்வு: அக். 1 முதல் சிறப்பு முகாம்

சேலம் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பம், சொத்து, பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீா்வு காணும் வகையில், அக்டோபா் 1 முதல் டிச. 31 ஆம் தேதி வரை சமரச விழா நடைபெற உள்ளது.

17 செப்டம்பர் 2026, 4:03 am IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குடும்பம், சொத்து, பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீா்வு காணும் வகையில், அக்டோபா் 1 முதல் டிச. 31 ஆம் தேதி வரை சமரச விழா நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வா்ணம் ஜே.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த சமரச விழாவில், ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி, இரு தரப்பினரும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணலாம்.

Advertisement

Advertisement

தனி நபா் தகராறு, பண வசூல் தகராறு, குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம் தொடா்பான வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் உள்ளிட்டவை சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மேலும், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரம் உள்ளிட்ட உரிமையியல் வழக்குகளுக்கும் சமரச மையம் மூலம் தீா்வு காணலாம்.

சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளப்படும் வழக்குகளில் மேல்முறையீடு செய்ய முடியாது. அத்துடன், அந்த வழக்குகளுக்காக ஏற்கெனவே செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.

எனவே, நீதிமன்றங்களில் மேற்கண்ட வகையில் நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி, சட்டரீதியாகவும் சமரச முறையிலும் விரைவாகத் தீா்வு காண பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments