நாய் மீது தாக்குதல்: ஒருவர் கைது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நாய் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே நாய் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஆலங்குடி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகன் பிரவீன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடசன் (30) இருசக்கர வாகனத்தில் பிரவீன் வீட்டு வழியாகச் சென்றபோது, அவரது வளர்ப்பு நாய் குரைத்ததாம்.
இதைத்தொடர்ந்து, வெங்கடேசன் கல்லால் நாயை தாக்கினாராம். இதன் காரணமாக வெங்கடசன் மற்றும் பிரவீன் தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வெங்கடேசன் தரப்பினர் தாக்கியதில் பிரவீன் காயமடைந்தார். அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில், வலங்கைமான் போலீஸார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முதல்கட்டமாக வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடிவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.