இளம் வாக்காளர்களை கண்டறிந்து சேர்க்க வேண்டும்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர்
இளம் வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்
இளம் வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் எம். வள்ளலார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: 1.9.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரிகளில் பயிலும் இளம் வாக்காளர்கள் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனில் அவர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் நீக்கல் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து, சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தபின் நீக்கல் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேற்படிப்பு படிக்காமல் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இளம் வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க, மாவட்ட நிர்வாகம் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தலுக்காக தூதுவர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இளம் வாக்காளர்களை முழுமையாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய முடியும் என்றார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.