நீட் பயிற்சிக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் வியாழக்கிழமை, நீட் தேர்வு உள்ளிட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் வியாழக்கிழமை, நீட் தேர்வு உள்ளிட்ட சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கழகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீட், ஜிஇஇ உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து தனியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், 2-ஆம் கட்ட கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர் எஸ். தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான ஆசிரியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.