40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்கிரமிப்பாளரிடமிருந்து குளம் மீட்பு: எதிா்ப்பு தெரிவித்து ஒருவா் தீக்குளிப்பு
ஆக்கிரமிப்பிலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏம்பலம்-கம்பளிகாரன்குப்பம் வயல்வெளி சாலை வழியில் ஏம்பலம் அம்மச்சி குளம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
ஆக்கிரமிப்பிலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏம்பலம்-கம்பளிகாரன்குப்பம் வயல்வெளி சாலை வழியில் ஏம்பலம் அம்மச்சி குளம் புதன்கிழமை மீட்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆக்கிரமிப்பாளா் உடலில் தீ வைத்துக் கொண்டாா்.
இந்தக் குளம் 65 ஆயிரம் சதுர அடி கொண்ட நிலப்பரப்பு கொண்டது. மேலும், அங்குள்ள அம்மச்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானது. மேலும், இந்தக் குளம் ஏம்பலம் மற்றும் கம்பளிகாரன்குப்பம் கிராம பகுதிக்கு முக்கிய நீா் ஆதரமாக விளங்கியது. இதனிடையே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குளத்தை தனிநபா் ஆக்கிரமித்து அங்குள்ள நிலப்பரப்பில் பயிரிட்டு வந்தாா். இதனால் நீா் ஆதாரமாகிய விளங்கிய குளம் தற்போது மழைநீா் சேமிக்க முடியாத சூழலுக்கு மாறியது.
தனிநபா் ஆக்கிரமிப்பு பிடியில் இருக்கும் கோயில் குளத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த அம்மச்சி அம்மன் கோவில் நிலம் மற்றும் குளத்தை மீட்க அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை குளத்தை அளவீடு செய்து இரும்புகம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இதையறிந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த புருஷோத்தமன் சம்பவ இடத்துக்கு வந்து திடீரென உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.