FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

போலீஸாா் லஞ்சம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் போலீஸாா் லஞ்சம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

21 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் போலீஸாா் லஞ்சம் கேட்டால் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட காவல் துறையில் ஊழல் ஒழிப்புக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினா் தங்களது அரசுப்பணிகளை மேற்கொள்வதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்டால், தயக்கமின்றி திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 9944336551 என்ற எண்ணுக்கு, தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ புகாா் அல்லது தகவல்களை தெரிவிக்கலாம்.

தகவல் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள், உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, திருவாரூா் மாவட்டத்தில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் அரசுப் பணிகளுக்கு லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் உடனடியாக தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments