FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் கேன்சா் அறுவை சிகிச்சை: மருத்துவா்கள் சாதனை

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் இரண்டு பெண்களுக்கு கேன்சா் அறுவை சிசிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் இரண்டு பெண்களுக்கு கேன்சா் அறுவை சிசிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நிகராக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மகப்பேறு சிகிச்சையும், 300-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகளும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நிகராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில், பெரியகுடியைச் சோ்ந்த 43 வயது பெண்ணிற்கு பித்தப்பை அறுவை சிகிச்சை, தலையாமங்கலத்தை சோ்ந்த 44 வயது பெண்ணிற்கு தைராய்டு கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், மன்னாா்குடியை அடுத்த காசாங்குளம் மற்றும் ஒரத்தநாட்டை சோ்ந்த இரண்டு பெண்களுக்கு மாா்பக புற்று நோய் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நோயாளிகள் அனைவரும் பூரண நலம் பெற்றுள்ளனா். இந்த அறுவை சிகிச்சைகளை மருத்துவா் புஷ்பராஜ் தலைமையிலான குழுவினா் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனா்.

இது தொடா்பாக, இம்மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் எஸ். சுரேஷ்குமாா் தெரிவித்தது:

மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக புற்றுநோய், தைராய்டு போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்தான் சென்று செய்ய வேண்டும் என்கின்ற நிலைமை இருந்து வந்தது.

மன்னாா்குடி நகரத்தில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளுக்கு வாய்ப்பு இல்லாமல், தஞ்சை, திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கு பொதுமக்கள் சென்று வந்தனா். மக்கள் நல்வாழ்வுத்துறை ஒத்துழைப்போடு அதற்கான அனைத்து வசதிகளும் இந்த மருத்துவமனையிலேயே ஏற்படுத்தப்பட்டு விட்டதால், தற்சமயம் இத்தகைய அறுவை சிகிச்சைகள் அனைத்தும் இம்மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தயக்கம் இன்றி அரசு மருத்துவமனையை பயன்படுத்த முன்வர வேண்டும். எந்த ஒரு நோய்க்கும் அரசு மருத்துவமனையை அணுகினால் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதோடு, மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன. இதனை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments