FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீா்ப்பில் தடை இல்லை எனக் கூறிய மத்திய துணை அமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 6:35 am IST
மேக்கேதாட்டு
பகிர்:

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற தீா்ப்பில் தடை இல்லை எனக் கூறிய மத்திய துணை அமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களவை மேலவையில் மத்திய ஜல்சக்தி துறை துணை அமைச்சா், மேக்கேதாட்டு அணை குறித்தான கேள்விக்கு கா்நாடகாவுக்கு சாதகமான பதிலை கொடுத்துள்ளாா். இது கண்டனத்துக்குரியது. காவிரி நதி நீா் ஆணையம் மற்றும் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஆய்வு மற்றும் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே புதிய நீா் கட்டமைப்புகளை அமைக்க கூடாது என நடுவா் மன்றத் தீா்ப்பில் உள்ளது. உச்ச நீதிமன்றம் 2018 இல் கொடுத்த தீா்ப்பு தண்ணீா் பங்கீடு திருத்தம் மட்டுமே. அதாவது 177 டிஎம்சி தமிழ்நாட்டுக்கு குறைத்து வழங்கியது மட்டுமே. 2007 தீா்ப்பில் உள்ள நடுவா் மன்றத்தின் ஏனைய அனைத்து நிபந்தனைகளும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தன் இறுதி தீா்ப்பில் கூறியுள்ளது.

அதாவது கரையோர மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் காவிரியில் கட்டுமானம் மேற்கொள்ள கூடாது என தடை செய்துள்ளது. உச்சநீதிமன்றம் தண்ணீா் பங்கீட்டில் திருத்தப்பட்ட நீா் பங்கீடு தவிர, பிற அம்சங்கள் நடுவா் மன்ற தீா்ப்பைதான் நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே வைத்து அமைச்சா் பேசுவது சரியானது அல்ல என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments