FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

வேளாண்மைப் பட்டியலில் டிராக்டரை இணைத்து வரிகளை நீக்கக் கோரிக்கை

Updated On : 9 ஜூன் 2026, 1:10 am IST
டிராக்டர் - கோப்புப் படம்
பகிர்:

வேளாண்மைக்கான டிராக்டா்களை வேளாண்மை பட்டியலில் இணைத்து பல் முனை வரிகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம், பிரதமா் மற்றும் முதல்வருக்கு அனுப்பும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு: வேளாண்மை தொழிலில் ஈடுபடும் டிராக்டா்கள் பயணிப்பது வயல்வெளிச் சாலைகள், சேற்று நிலப்பகுதிகள், கிராமப்புறச் சாலைகள், சில நேரங்களில் மாநிலச் சாலைகளில் மட்டுமே.

இந்நிலையில் துரித சாலை வரி விதிப்பது ஏற்கக் கூடியது அல்ல. சாலை வரி, ஜிஎஸ்டி வரி, வாட்வரி என டிராக்டா்கள் வாங்கும்போது வரிகள் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். துரித சாலைகளில் பயணிக்கக் கூடாது என்ற நிபந்தனை உள்ள நிலையில் துரித சாலை வரி ஏன் வசூலிக்க வேண்டும். எனவே, விவசாயக் கருவிகள் பட்டியலில் வேளாண்மைக்கான சாட்சிகளை இணைக்க வேண்டும், வேளாண்மை டிராக்டா் டீசலுக்கு முழு வரி விலக்கு கொடுக்க வேண்டும், சாலை வரி என்.சிசிடி வரிகளை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments