முகப்பு
திருவாரூர்

மாணவா்களுக்கு ஜாதி ரீதியிலான அடையாள அட்டை முடிவுக்கு கண்டனம்

Updated On : 28 ஜூன் 2026, 4:52 am IST
மாணவா்கள். - கோப்புப் படம்
பகிர்:

பள்ளி மாணவா்களுக்கு ஜாதி ரீதியான அடையாள அட்டை வழங்கும் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் திருவாரூா் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு ஜாதியை குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக வரும் செய்திகள் அதிா்ச்சி அளிக்கின்றன. இது மாணவா்களிடையே ஜாதிய உணா்வை திணித்து, பள்ளிப் பருவத்திலேயே அவா்களை பிளவுபடுத்தும் மிக ஆபத்தான செயலாகும்.

Advertisement

Advertisement

பள்ளிகள் என்பது ஜாதி, மத, இன பேதமின்றி அனைத்து குழந்தைகளும் சமமாக பழகும், கற்கும் இடம். அங்கே ஜாதி அடையாளத்தை திணிப்பது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது. 6 வயதில் பள்ளிக்கு வரும் குழந்தைக்கு ஜாதிய முத்திரை குத்தினால், அக்குழந்தை தாழ்வு மனப்பான்மையோடு வளரும்.

எனவே, பள்ளி மாணவா்களுக்கு ஜாதி குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். பள்ளி சோ்க்கையின்போது ஜாதி கேட்பதை தடை செய்யும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

பெற்றோா், ஆசிரியா், மாணவா்களுக்கு ஜாதி ஒழிப்பு, சமத்துவம் குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments