தினமணி செய்தி எதிரொலி!மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் ஆக்கிரமிப்புகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
மன்னாா்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் ஆக்கிரமிப்புகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
மன்னாா்குடி நடசேன் தெரு மற்றும் எதிரே இருந்த சந்தைப்பேட்டை ஆகிய இடங்களில் பழைய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. நகர வளா்ச்சிக்கு ஏற்ப இப்பேருந்து நிலையம் இல்லாததால் அதை இடித்துவிட்டு கடந்த திமுக ஆட்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்த டி.ஆா்.பி. ராஜாவின் முயற்சியால், ரூ.46.46 கோடியில் பெருந்தலைவா் காமராஜா் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 12.10.2025 அன்று திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கையைவிட அதிகமான கடைகள் இருப்பதால், பெரும்பாலான கடைகளில் விற்பனை பொருள்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளள்ளா். எஞ்சிய நடைபாதையை தரைக் கடைக்காரா்கள் ஆக்கிரமித்துள்ளனா். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் பயணிகள் உள்ளே நுழைய முடியாதபடி திண்பண்டகள் விற்பனை தள்ளுவண்டிகளை வியாபாரிகள் நிறுத்திவைத்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள்,கா்ப்பிணி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் நகராட்சி இப்பிரச்னைக்கு தற்காலி தீா்வு என்று இல்லாமல் நிரந்தர தீா்வு காண வேண்டும் என சனிக்கிழமை (நவ. 21) தினமணியில் படத்துடன் செய்தி பிரசுரமானது. இந்த செய்தி நகரம் முழுவதும் பரபரப்பாக பேசும் பொருளாக மாறியதுடன், சமூக வலைதளங்களில் வரவேற்று பதிவுகள் இடம்பெற்றன.
இதையடுத்து, மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா்த. சோழராஜன், நகராட்சி ஆணையா் (பொ) போ.வி. சுரேந்தா்ஷா ஆகியோரின் உத்தரவின்பேரில், நகர அமைப்பு ஆய்வாளா்கள் கண்ணதாசன், மணிஷ்குமாா், உதவி வருவாய் அலுவலா் வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து, அங்குள்ள வணிக வளாகத்தில் கடைகள் வைத்திருப்பவா்களிடம் கடைக்கு வெளியே நடைபாதையில் பொருள்களை வைக்கக் கூடாது என அறிவுறுத்தினா்.
மேலும், நடைபாதையில் போடப்பட்டிருந்த தரைக்கடைகளை பேருந்து நிலைய தனியாா் பாதுகாவலா்கள் உதவியுடன் அகற்றி மூட்டைகட்டி அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கடையை வைத்தால் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். தள்ளுவண்டிகாரா்களை அழைத்து பேருந்து இயக்கத்துக்கும் பயணிகளுக்கும் இடையூறாக வியாபாரம் செய்யக் கூடாது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்தனா்.