FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இளம்பெண் சுட்டுக் கொலை: இரு இளைஞர்கள் கைது

தில்லியின் பிந்தாபூர் பகுதியில், 19 வயது இளம்பெண்ணை சுட்டுக் கொன்றதாக, இரு இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

தில்லியின் பிந்தாபூர் பகுதியில், 19 வயது இளம்பெண்ணை சுட்டுக் கொன்றதாக, இரு இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கைதான இருவரும், உத்தம் நகரைச் சேர்ந்த முகேஷ் குமார் ரதோர் (32), மோகித் கௌஷிக் (26) ஆவர். இவர்களில் ரதோர், பிந்தாபூர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா (எ) டோலி என்ற இளம்பெண்ணுக்கு, கார் ஓட்ட பயற்சி அளித்து வந்தார்.

Advertisement

Advertisement

அப்போது, சொத்து ஒன்றை விற்றதன் மூலம் ஹேமலதாவின் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகை கிடைத்தது பற்றி ரதோர் அறிந்து கொண்டார்.

ஏற்கெனவே கடனில் தவித்து வந்த ரதோர், தனது கூட்டாளி மோஹித் கௌஷிக்குடன் சேர்ந்து ஹேமலதாவின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஹேமலதாவின் வீட்டுக்கு சென்ற இருவரும், அவரை சுட்டுக் கொலை செய்தனர். பின்னர், அவரது கைப்பை, செல்லிடப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். விசாரணையின்போது, இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments