FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தோட்டக்கலை பணிகளுக்கு மறுசுழற்சி நீர்: டிஜேபி அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள பூங்காக்கள், சாலையோர புல்தரைகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்துமாறு பொதுப்பணித் துறைக்கு தில்லி ஜல் போர்டு (டிஜேபி) அறிவுறுத்தியுள்ளது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

தில்லியில் உள்ள பூங்காக்கள், சாலையோர புல்தரைகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்துமாறு பொதுப்பணித் துறைக்கு தில்லி ஜல் போர்டு (டிஜேபி) அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, டிஜேபியின் கோரிக்கையை ஏற்று, தோட்டக்கலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் வரும் அக்டோபர் மாதம் முதல் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேபோல, தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), மூன்று மாநகராட்சி நிர்வாகங்களும் தங்களின் பகுதிக்கு உள்பட்ட வரைவுக்குள் உள்ள தோட்டக்கலைப் பயன்பாடுகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துமாறு டிஜேபி கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் உள்ள பூங்காக்கள், சாலையோர புல்தரைகள் ஆகியவற்றை பராமரிக்க நிலத்தடி நீரைத்தான் இதுவரை பொதுப்பணித் துறை பயன்படுத்தி வருகிறது.

தற்போது மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்த பொதுப்பணித் துறை ஒப்புக்கொண்டுள்ளதால், நாள்தோறும் 1.75 லட்சம் மில்லியன் நிலத்தடி நீர் சேமிக்கப்படும். மேலும், நிலத்தடி நீரின் அளவு குறைவதும் இதன்மூலம் தடுக்கப்படும் என்று டிஜேபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தில்லி அரசின் நீர் வளத் துறை அமைச்சரும், டிஜேபியின் தலைவருமான கபில் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் கூறுகையில், "குடிநீர்ப் பயன்பாட்டைத் தவிர்த்து, நிலத்தடி நீரைப் பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தோட்டக்கலைப் பணிகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நிலத்தடி நீர் காக்கப்படுவதுடன், பொருள்செலவும் குறையும். வரும் காலங்களில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகளிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படும்' என்றார்.

டிஜேபியின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.எஸ்.யாதவ் கூறுகையில், "தில்லியில் குடிநீர் தேவை அதிகரித்து வரும் சூழலில், மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாட்டை பொதுமக்களிடையே அதிகரிக்கச் செய்ய டிஜேபி முயற்சித்து வருகிறது.

இந்த நீரை தற்போது தோட்டக்கலைப் பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலை, விவசாயம் ஆகியவற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை  பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

தில்லியில் டிஜேபி சார்பில் தற்போது 17 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பலன் என்ன?

மறுசுழற்சி நீரைப் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் குறைவது தடுக்கப்படும்.

நாள்தோறும் 1.75 லட்சம் மில்லியன் நிலத்தடி நீர் சேமிக்கப்படும்.

நிலத்தடி நீர் காக்கப்படுவதுடன், பொருள்செலவும் குறையும்.

தொழிற்சாலை, விவசாயத்துக்கும் மறுசுழற்சி நீரை பயன்படுத்துவதற்கும் முயற்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments