FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"ஈபிஎஃப் வரி விதிப்பு விவகாரத்துக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்'

வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) வரி விதிப்பு விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) வரி விதிப்பு விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

இது தொடர்பாக மக்களவையில் மயிலாடுதுறை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன் வியாழக்கிழமை இரவு பேசியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (ஈபிஎஃப்), தொழிலாளர்கள் திரும்பப் பெறும் போது 60 சதவீதம் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மீதமுள்ள 40 சதவீதத் தொகையை ஏதாவது பத்திரங்களில் முதலீடு செய்ய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் தலைமையிலான அதிமுக கண்டிக்கிறது. எனவே, இந்த வரி விதிப்பு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) என்பது தொழிலாளர்களின் வாழ்நாள் சேமிப்பாகும். ஊழியர்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறும் போது, அதில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை.

Advertisement

Advertisement

ஆகவே, இந்தப் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் ஈபிஎஃப் வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments