FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துணைநிலை ஆளுநர், மத்திய அரசிடமிருந்து விடுதலை வேண்டும்: கேஜரிவால்

தில்லி அரசின் செயல்பாடுகளில் துணை நிலை ஆளுநர், மத்திய அரசு ஆகியோர் தலையிடுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறினார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தில்லி அரசின் செயல்பாடுகளில் துணை நிலை ஆளுநர், மத்திய அரசு ஆகியோர் தலையிடுவதில் இருந்து விடுதலை வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறினார்.

இதுகுறித்து, கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "நாங்கள் கேட்பது என்ன? விடுதலை. துணைநிலை ஆளுநர் தலையீட்டில் இருந்து விடுதலை. மத்திய அரசின் தலையீட்டில் இருந்து விடுதலை. அரசு விவகாரங்களில் முடிவெடுப்பதற்காக விடுதலை. அரசியல் அரஜாகத்தில் இருந்து விடுதலை.

கன்னையா என்ன ஓரு அருமையான உரையை நிகழ்த்தியுள்ளார்! மாணவர்களிடம் பிரச்னை வேண்டாம் என்று நான் உங்களிடம் பலமுறை கூறினேன் மோடி. நீங்கள் அதனை கேட்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமாருக்கு இடைக்கால ஜாமீன் புதன்கிழமை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் மாணவர்களிடையே வியாழக்கிழமை உரையாற்றும்போது விடுதலை (ஆஸாதி) என்ற வார்த்தையை முன்வைத்துப் பேசியது பரபரப்பானது.

இந்த நிலையில் தற்போது அரவிந்த் கேஜரிவால் அதேபோன்று விடுதலை என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். கன்னையா குமாருக்கும், ஜேஎன்யு போராட்டத்துக்கும் கேஜரிவால் தொடக்கத்தில் இருந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments