FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு பிரணாப் இன்று தொடங்கி வைக்கிறார்

சட்டப்பேரவை, நாடாளுமன்ற ஆகியவற்றின் பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தேசிய மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு தில்லியில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சட்டப்பேரவை, நாடாளுமன்ற ஆகியவற்றின் பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தேசிய மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு தில்லியில் மார்ச் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

"எழுச்சிமிகு இந்தியாவைக் கட்டமைக்கும் மகளிர் மக்கள் பிரதிநிதிகள்' எனும் தலைப்பில்

தில்லி விஞ்ஞான் பவனில் இந்த மாநாடு சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார். இதில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, வங்க தேச ஷத்தியோ ஷங்சத் பேரவைத் தலைவர் டாக்டர் ஷ்ரின் ஷர்மின் சௌத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Advertisement

Advertisement

நிறைவு நாள் நிகழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சென்ட்ரல் ஹாலில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றுகிறார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிறைவுரையாற்றுகிறார்.

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் முயற்சியால் நடைபெறும் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் என 300-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments