FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பிரதமர் இல்லம் நோக்கி இளைஞர் காங்கிரஸார் பேரணி: போலீஸார் தடியடி

ரஃபேல் போர் விமான பேர விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, பிரதமர் இல்லம் நோக்கி இளைஞர் காங்கிரஸார் (ஐஒய்சி)

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

ரஃபேல் போர் விமான பேர விவகாரத்தில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, பிரதமர் இல்லம் நோக்கி இளைஞர் காங்கிரஸார் (ஐஒய்சி) தில்லியில் வியாழக்கிழமை பேரணி நடத்தினர். இந்தப் பேரணியைத் தடுத்து நிறுத்திய தில்லி காவல் துறையினர், தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்ததால் பரபரப்பு நிலவியது.
தில்லி அக்பர் சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிரதமர் இல்லம் நோக்கி, இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் கேசவ் சந்தா ஜாதவ் தலைமையில், துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ், இணைச் செயலர் கிருஷ்ணா, மாநிலத் தலைவர்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பேரணி நடத்தினர்.
பிரதமர் இல்லம் அருகே சென்ற இந்தப் பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களைக் கலைக்க லேசான தடியடியும் நடத்தினர். அப்போது சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு மந்திர் மார்க், துக்ளக் ரோடு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
 இது தொடர்பாக ஐஒய்சி தேசியத் தலைவர் கேசவ் சந்தா ஜாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ராணுவ ஒப்பந்தம், மோடியின் நண்பரான ரிலையன்ஸ் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்தக் கொள்கை முடிவால் அரசு நிறுவனமான "ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்' நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 
முந்தைய ஒப்பந்தத்தின்படி 126 விமானங்கள் ரூ.90,000 கோடிக்கு வாங்குவதாக இருந்தது. ஆனால், 36 விமானங்கள் ரூ.60,000 கோடிக்கு வாங்குவதாக ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளது. 
அதாவது, ஒரு விமானத்துக்கான விலை ரூ.714 கோடியிலிருந்து ரூ.1,611 கோடியாக உயர்ந்துள்ளது. இது அப்பட்டமான ஊழல் ஆகும். 
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் கூறாமல் மௌனமாக உள்ளார். அரசு நிறுவனத்தைத் தவிர்த்து தனியார் நிறுவனத்துக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் வழங்கலாம்? இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும். 
இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவை ஏன் அமைக்கவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments