பருவமழையால் பரவும் தொற்று நோய்கள்: விழிப்புணர்வு பிரசாரத்துக்கு எஸ்டிஎம்சி ஏற்பாடு
பருவமழையால் பரவும் தொற்று நோய்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெற்கு தில்லி மாநகராட்சி
பருவமழையால் பரவும் தொற்று நோய்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) கருத்தரங்குகள், பிரசாரம் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
தில்லியில் பருவமழை இன்னும் சில நாள்களில் ஆரம்பமாகவுள்ளது. பருவமழைக் காலங்களில் தில்லியில் டைஃபாயிடு, சிக்குன்குனியா, காலரா, வயிற்றுப்போக்கு, மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை, இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிக அளவில் பரவுகின்றன.
இந்த நோய்களால் தில்லியில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நோய்களைத் தடுப்பதற்கான முன் ஏற்பாடு நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்குகளில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு, நோய்த் தொற்று தொடர்பாக எடுத்துரைப்பர்.
மேலும், வீடு வீடாகச் சென்று பருவமழையால் பரவும் நோய்கள் தொடர்பாக பிரசாரமும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பிரசாரத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் பங்கேற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.