FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் தாகூருக்கு தலைவர்கள் மலர் மரியாதை

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின்

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும், குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான வங்க மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை ஒட்டி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு தலைவர்கள் மலர் மரியாதை செய்தனர்.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் அமைந்துள்ள தாகூரின் உருவப் படத்திற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹவால், நாடாளுமன்ற விவகாரம் மற்றும் புள்ளியில், திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் விஜய் கோயல், முன்னாள் துணைப் பிரதமரும், மக்களவை நெறிமுறைக் குழுவின் தலைவருமான எல்.கே. அத்வானி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், மத்தியஅமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவைச் செயலக பொதுச் செயலர் ஸ்நேஹலதா ஸ்ரீவாஸ்தவா, இரு அவைகளின் மூத்த அதிகாரிகள் பலர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களவைச் செயலகத்தால் ஹிந்தி, ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய சிறு புத்தகம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற மைய அரங்கில் ரவீந்திரநாத் தாகூரின் ஆளுயர உருவப் படம் 1958, செப்டம்பர் 12-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் திறந்துவைக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments