FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கே.எம்.பி. நெடுஞ்சாலையால் தில்லி காற்று மாசு குறையும்: மனோஜ் திவாரி நம்பிக்கை

குன்ட்லி - மானேசர்- பல்வல் இடையே அமைக்கப்பட்டுள்ள கேஎம்பி நெடுஞ்சாலையால் தில்லியில் காற்று மாசு கணிசமாகக் குறையும்

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

குன்ட்லி - மானேசர்- பல்வல் இடையே அமைக்கப்பட்டுள்ள கேஎம்பி நெடுஞ்சாலையால் தில்லியில் காற்று மாசு கணிசமாகக் குறையும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி நம்பிக்கை தெரிவித்தார்.
 இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது: 
தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடிப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசுவைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள தில்லி அரசு, இது தொடர்பாக பாராமுகமாக உள்ளது. தில்லியில் நிலவும் காற்று மாசுவுக்கு பொறுப்புக் கூறாமல் தில்லி முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் துபைக்கு சுற்றுலா சென்றார். இந்நிலையில், குன்ட்லி - மானேசர் - பல்வல் இடையே சுமார் ரூ.6,400 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 136 கிலோ மீட்டர் நீளமான கேஎம்பி நெடுஞ்சாலையால் வாகனங்களின் பயண நேரம் பெருமளவில் குறையும். இதனால், எரிபொருள் பயன்பாடும், காற்று மாசும் குறையும். இந்நிலையில், தில்லியில் நிலவும் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments