கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் கைது
கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரைத் துப்பாக்கியுடன் போலீஸார் கைது செய்தனர்.
கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரைத் துப்பாக்கியுடன் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக தில்லி கிழக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் பங்கஜ் குமார் சிங் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
பிரீத் விஹார் பகுதியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் வகையில், அப்பகுதி போலீஸார் ஒரு தனிப்படை அமைத்திருந்தனர். அப்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாய் மந்திர் முன் பகுதியில் உள்ள பிபிஜி சாலை பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். காஜியாபாதைச் சேர்ந்த ஆசிஃப் (24) கைது செய்யப்பட்டார். அவருக்கு தில்லி, உத்தரப் பிரதேச மாநிலங்கள் நிகழ்ந்த 8 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் அதிகாரி பங்கஜ் குமார் சிங் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.