FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மயூர் விஹார் பேஸ்-3 கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம்

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதையொட்டி, செப்டம்பர் 9 முதல் 12-ஆம் தேதி வரை வேத விற்பன்னர்களின் சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. காலையிலும், மாலையிலும் பக்தர்களின் நன்மைக்காக 8 வேத பண்டிதர்களால் சிறப்பு வேத பாராயணம் நடைபெறும். அருள்மிகு இஷ்ட சித்தி விநாயகருக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை செப்டம்பர் 13-ஆம் தேதி முடிவடைகிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை விஜய கணபதி ஹோமம், லட்சுமி கணபதி ஹோமம், ஏகவார ருத்ராபிஷேகம் நடைபெறும். செப்.10 முதல் 12-ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை அதர்வஷீச ஹோமம், துர்கா கணபதி ஹோமம், அர்க்க கணபதி ஹோமம் நடைபெறும்.  செப்.13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு மோதக சஹஸ்ரநாம அர்ச்சனையும், மாலை 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 8.45 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 
செப். 14-ஆம் தேதி மாலையில் இசைக் கலைஞர் அம்பிகா ஸ்ரீகாந்தின் மாணவர்கள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சியும், செப்.15-ஆம் தேதி மாலையில் ருக்மணி மற்றும் குழுவினர் பங்கேற்கும் மகளிர் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். செப்.9 முதல் 12-ஆம் தேதி வரை ராஜ்சேகர ஸ்ரௌத்திகள்தலைமையிலான வேத பண்டிதர்கள் பங்கேற்கும் சதுர் வேத பாராயணம் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும். செப்டம்பர் 16-ஆம் தேதி விநாயகரின் உத்ஸவர் ஊர்வலம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். செப். 9 முதல் 16-ஆம் தேதி வரை தினமும் சிறப்பு அலங்காரங்களில் விநாயகர் அருள்பாலிக்க உள்ளார். இத்தகவலை ஸ்ரீஆதி சங்கர சேவா சமாஜத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments