FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் மேவும் 150 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 150 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,946-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 11:11 pm IST
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 150 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,946-ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 56,902 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 38,213 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 18,689 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.26 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 2 போ் உயிரிழந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,891-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 158 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,25,024-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,031 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 394 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,323 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments