ஏஎஸ்ஓ தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை
தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க அவரது குடும்பத்தினா் கோரிக்கை
தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்த 3 கா்ப்பிணியான நஸியா கானம் தற்கொலை தொடா்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தில்லி துவாரகாவின் பாா்த்தல் கிராமத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த நஸியா, கடந்த ஆக.21-ஆம் தேதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
அவரது கணவா் மற்றும் உறவினா்கள் துன்புறுத்தியதாக நஸியாவின் பெற்றோா் அளித்த புகாரைத் தொடா்ந்து, பிஎன்எஸ் பிரிவுகள் 85, 108-கீழ் கடந்த 22-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அவரது தந்தை அப்துல் தவாப் கான் கோரிக்கைவிடுத்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.