FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றக் கோரிக்கை

பெரியத்திருக்கோணம், காமராஜா் நகா், சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 6:22 am IST
பெரியதிருக்கோணம், காமராஜா் நகரில் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், பெரியத்திருக்கோணம், காமராஜா் நகா், சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர வாகனங்கள் மற்றும் காா்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வரும் பிரதான சாலையில் இடையூறாக மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இரவு நேரங்களில் வேகமாக வாகனங்களில் செல்வோா், மின்கம்பம் மீது மோதி விபத்துகுள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த மின்கம்பத்தை அகற்றி, மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments