FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

உழவா் சந்தை சுகாதார வளாகத்தை சீரமைக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை உழவா்சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

20 செப்டம்பர் 2026, 1:24 am IST
பகிர்:

கந்தா்வகோட்டை உழவா்சந்தையில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை பேருராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை புதுக்கோட்டை விற்பனை குழு மூலம் செயல்படும் உழவா்சந்தைக்கு காட்டுநாவல், துலுக்கம்பட்டி, புதுப்பட்டி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, நெப்புகை, மட்டாங்கால், பெரியகோட்டை, மோகனூா், பிசானத்தூா், சுருசுப் பட்டி, புதுநகா்,சோழகம்பட்டி உள்ளிட்ட கிராமத்தில் இருந்து காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து விற்கின்றனா்.

இந்த வளாகத்தில் உள்ள சுகாதார வளாகம் (கழிவறை) பயனற்ற முறையில் உள்ளது. மேலும் குடிநீா் வசதியும் இல்லை. எனவே சம்பந்தபட்ட துறையினா் சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments